வருவாயா
உன் சிரிப்பு..
சிறுகதை தொகுப்பு!
உன் மீது எனது ஆவல்..
அழகிய நாவல்.!
உன் உருவம் ..
அழியா ஓவியம்..
உன் வாக்கியம்..
எனது பாக்கியம்..!
எனக்கு நீ இயக்கம் ..!
இன்னும் ஏன் தயக்கம்..!
நீ என்னிடம் வாராது..
தீராது என் மயக்கம்..!
மின்னலாய் ஈராண்டு
பதின் வயதில் நட்பு கொண்டு ..
பிரிந்தவளே..
இன்னும் மணம் புரியா
வாலிபன் இவன் ..
உன்..
வரவு நோக்கி ..
வாழுபவன்..!