கிராமத்து காதல் ♥️♥️பொங்கல் வாழ்த்துக்கள்
கிராமத்து காதல்♥️♥️பொங்கல் வாழ்த்துக்கள்
---------
- பாலு.
"பழைய கஞ்சி, பச்ச மிளகாய், இரண்டு துண்டு கருவாடும் கொண்டாந்திருக்கேன், மச்சான் .... வாய்யா... வந்து சாப்பிடு. "
"வாடி என் அழகு மயிலே,
நீயே உன் கையாலேயே ஊட்டி விடேன்"
"ரொம்ப தான் உனக்கு ஆசை மச்சான் "
"அப்ப ஊட்டி விட மாட்டியா என் அழகு தங்கமே"
" குழந்தை பாரு... சரி...கிட்ட வா ஊட்டி விடறேன் ,"
"நல்லா இருக்கா மச்சான் "
"உங்கையால விஷத்தை கொடுத்தாலும், அது எனக்கு அமிர்தம் தாண்டி என் செல்ல கிளியே"
"பழைய கஞ்சின்னு கிண்டல் பண்றியா, ஏன்? மச்சான் "
"போடி கிறுக்குக்கு, என் ஆத்தா மேல சத்தியமா நீ என்ன போட்டாலும் சாப்பிடும் இந்த கழுதை, உன் காலையே சுத்தும் இந்த பாம்பு". என் மேல அம்புட்டு பாசமா..... ஏன்? மச்சான். "என்னடி அப்படி கேட்டுபுட்ட, எனக்கு இந்த விவசாயம் உயிர்ண்ணா, நீ எனக்கு மூச்சு." கண்ணு கலங்கது என் ஆசை மச்சான்". "போடி என் அழகு சிறுக்கி". "வேலை அதிகமா மச்சான்." "உன் கொத்தும் கண்ண நினைச்சு உழுதிடுவேன் , கஷ்டம் தெரியாது, உன் இடுப்ப நினைச்சு விதை விதைப்பேன் வேலை சுமையே தெரியாது". "போய்யா... எனக்கு வெக்கமா இருக்கு..." "மெய்யாலுமே தாண்டி சொல்லுறேன் நீ தாண்டி..நீ மட்டும் தாண்டி என் மனசு முழுக்க இருக்கிற..." "மச்சான்.... மச்சான்... மச்சான்.."
" என்னடி என் அழகு தேவதையே" " வந்து... வந்து.." " என்னடி என் செல்ல குட்டி.... என்னடி என் தங்கம்". " நா... நான் மாசமா இருக்கேன் மச்சான்." "கள்ளி...கள்ளி.. என் ஆழகு ராணியே, என்ன ஆண்மகனா அடையாளம் காண்பிச்சுட்டேயே... அப்போ நான் அப்பாவா ஆக போரேனா.... செவத்த உடம்பு காரியே.. புள்ளதாச்சியே என்ன வேனும் உனக்கு, என்ன வேனாலும் கேளு வாங்கி தரேன் உன் ஆசை மச்சான்".
"இந்த உலகத்துல விலை உயர்ந்த ஒன்னு பொருள் இருக்கு" .
"அது என்னடி என் செல்லம்."
" அது வந்து , அது வந்து..."
" ஏன் புள்ள பீடிகை போடுர.. அப்படி என்ன தாண்டி அந்த விலை உசந்த பொருள்.
"கிட்ட வாயா என் வெல்ல கட்டி, என் கண்ணையே உத்து
பாரு, அதுல யாரு தெரியிரா... என் மூஞ்சு தாண்டி ... என் முகரகட்ட தாண்டி தெரியுது "
"மக்கு பையா, மக்கு பையா.... இன்னுமா தெரியில, புரியில... "
"அப்ப நான் தான் அந்த உசந்த பொருளா..." "அமாம்யா... நீ தான்....நீயே தான்... எனக்கு எப்போதும் வேனும்." " அடியே...
என் ஜொலிக்கும் ரத்தினமே... நீ தாண்டி என் அழகு சுந்தரி".
அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
- பாலு.