கனவே கலையாதே
நாசித் துவாரங்கள்
சுவாசித்த மண்வாசம்
காதுக்குள் ஒலித்த
சடசட மழைச் சத்தம்
வீட்டு முற்றக் குழாய்க்குள்
வந்திறங்கிய மழை நீர்
வீதியில் கரை புரண்டோடிய
செம்மண் தோய்ந்த பெருவெள்ளம்
செடிகளின் இலைகள் தோறும்
முத்து முத்தாய் மழைத்துளி
மழை நேரத்து
மாலை வேளையில்
மனங்குளிர்ந்த மகிழ்ச்சியுடன்
கையில் காகிதக் கப்பலுடன் நான்
கவலை தோய்ந்த முகத்துடன்
துணை துறந்த
காகிதக் கப்பல் மாலுமியாய்
அந்தக் கட்டெறும்பு
திடுக்கிட்டு விழித்தேன்
சிறுவயது நினைவலைகள்
கனவாக கண்ணயர்ந்த வேளையில்
கனவே கலையாதே!