அது ஒரு கனாக் காலம்

பதின்ம வயதில்
யாம் பெற்ற வாழ்க்கை
பண்பான பல நட்பு
பருவ வயதிற்கேற்ற
பரவசமான பல நாட்கள்

கண் ஆடி முன் நின்று
கருத்தாய் கண் மை தீட்டல்
முகம் பளிச்சிட
பல இன்ச்சுக்கு முகப்பவுடர்
பார்த்து பார்த்து லிப்ஸ்டிக்
மீசை முளைக்கா நாட்களிலே
முகச்சவரம் பல நாள்
பல பேருக்கு
அது பொழுது போக்கு

கரம் பிடித்து நட்போடு
நடப்பது உண்டு
நட்பு மிகப்பெற்ற பல பேருக்கு
கண்ணோடு கண் பார்த்து
காதல் வந்து
கண் சிமிட்டுவதுமுண்டு
கனவாய் அதை நினைத்து
கடந்து செல்வதுமுண்டு

பாடப் புத்தகத்தினூடே
பிரபஞ்சனும் வைரமுத்துவும்
ராஜேஷ்குமாரும் வாலியும்
அகத்தா கிறிஸ்டியும்
ஷிட்னி ஷெல்டனும்
தலையணைக்கடியில் தவறாமல்

நடிகர்களும் நடிகைகளும்
விளையாட்டு வீரர்களும்
மனதுக்கருகில் எப்போதும்
சினிமா தியேட்டர்களும்
பார்க்கும் பீச்சும்
பள்ளிக்கும் வீட்டில்
பெற்றோருக்கும் தெரியாமல்

சில நாட்களே நீடித்த
பொய்யான பல சண்டை
பொறுமை கொண்ட
பல தோழமையுடன்
மகிழ்ச்சி துக்கம்
ஏச்சுப் பேச்சுடன்
சிரிப்பும் கோபமும்
எல்லை இல்லாமல்.

எதிர்கால வாழ்க்கையின்
எதார்த்தம் புரியாமல்
வாழ்க்கையில் வசந்தமாய்
வந்து போன
பள்ளி கல்லூரி வாழ்க்கை
அது ஒரு கனாக்காலம்
கடந்ததை நினைத்து களித்திட
இன்று இது நிகழ்காலம்.

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்.

எழுதியவர் : தமிழ் மைந்தன் - ரிச்சர்டு (4-Aug-19, 11:10 am)
பார்வை : 701

மேலே