ஏழ்மை கொண்டாட்டத்திற்கானது

ஏழ்மை கொண்டாடப்பட வேண்டியது...

சந்தோசம் மட்டுமே ஏழ்மையின் அனுதினத் தேடல்...

அன்பினால் அரவணைத்து வாழ ஏழ்மை போதிக்கும்...

உடுத்த மட்டுமே உடை என உறுதியாக சொல்லித்தரும்...

கனவுகாணும் உயரங்களுக்குப் பறக்க ஏழ்மை கற்றுத் தரும்...

கீழிருந்து மேலேறும்போது சறுக்கும் சறுக்கல்களை சமாளிக்க ஏழ்மை கற்றுத் தரும்...

தொடக்கத்திலிருந்து இலக்கையடையும் அனுபவப்பாடத்தை ஏழ்மை சொல்லிக் கொடுக்கும்...

ருசிக்க சாப்பிடும் நாள் வரும்; இப்பொழுது பசி தீர்க்கும் வழி கண்டறி என சமரசமின்றி தேட வைக்கும்...

சுயநலம் கருதாது உழைக்கும் பாங்கை கட்டமைக்கும்...

ஏட்டிலடங்கா கல்வி பலவற்றை எளிதாக போதிக்கும்...

ஏழ்மை என்னும் நிஜ உலகில் வாழ்வை தொடங்கினவனை எவ்வித மாயையும் அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது...

எழுதியவர் : ஜான் (20-Jun-18, 9:02 pm)
பார்வை : 175

மேலே