உறங்கா விழிகள்
எங்கே தான் சென்றாய் நீ
உன்னைக் காணாமல்
நான் கரைகிறேன்
இங்கு தள்ளாடித் தவிக்கிறேன் ,
கனவிலே உன் முகம் காணும்
களிப்பிலே கண் மூடினால்
இடை நடுவில் ஓடோடி வந்து
என்னிரவின் நொடிகளை
உன் நினைவுகள் முழுவதுமாய்க்
கவர்ந்து கொல்கிறதே
என் விழிகளை
மட்டும் இப்போது நீ
நெருங்கி விடாதே
நித்திரை இழந்து
நெருப்புக் கோளமாய்
நிர்க்கதியில் கிடக்கும் அவை
கண்ட மாத்திரத்தில்
உன்னைச் சுக்குநூறாய்ச்
சுட்டெரித்து விடும்
அஷ்றப் அலி