பனித்துளி நட்பு

விடிந்தும் விடியாத பொழுதினில் ...
மலர்ந்தும் மலராத மலரினில் ...
அமர்ந்தும் அமராத நிலையினில் ..
ஒரு துளி ! சிறு துளி ! பனித்துளி !

அரும்பே ! அரும்பே ! அருமை அரும்பே !
மலராய் 'மலராய் ' இன்று நீ அரும்பே !
மன்றாடியது பனித்துளி தன் வெட்கத்தை விட்டு !
மலர்வதே அரும்பின் இயற்கை என்பதை மறந்துவிட்டு ?!
இதழ் விரித்து அரும்பு மலர்ந்தது ..
தன் விதியை நொந்து பனித்துளி விழுந்தது ..
மறைய வேண்டாம் மண்ணுள் நட்பு ..
என்று சிறுபுல் தாங்கி தந்தது பாதுகாப்பு !

களைப்பில் ஆழ்ந்தது பனித்துளி நித்திரையில் ..
ஆதவன் அணைக்க கரைந்தது காற்றுதனில் !
ஒவ்வொரு முறை காற்று தன்னை கடக்கும் போதும் ...
தலை வணங்கும் 'நட்புக்கு ' சிறு புல் இப்போதும் !

எழுதியவர் : meenatholkappian (4-Jan-16, 10:02 pm)
Tanglish : panithuli natpu
பார்வை : 154

மேலே