தழைக்கும் எம் வேர்கள் பழமொழி கவிதைகள் -பாகம் - 1

எறும்பு ஊர
கல்லும் தேயும் - அந்த
கல்லுக்குள் ஈரமும் வரும்
அங்கே செடியும் வளரும்!
சில மனங்களில் மட்டும்
உயிர் பெறுவதில்லை
உன்னத எண்ணங்கள்!
ஒவ்வொரு நாளும்
விதைத்தே செல்வோம்
நல் எண்ணங்களுடன்
பல் தாவர விதைகளையும்
என்றாவது தழைக்கும்
எம் வேர்கள்!