ஆனந்தம் பெறுவோமே
ஆனந்தம் பெறுவோம்!
கூவும் குயில்களுக்கு
குஞ்சுகள்
பொரிக்க இயலாது!
குஞ்சு பொரிக்கும்
காக்கைகளுக்கோ…
கூவ இயலாது!
கத்தும்
தவளைக்கு
அமைதி இயலாது
அமைதி அறிந்த
மனிதர்களுக்கே…
அன்பு தெரியும்!
அன்பாய்
இருப்போம்!
ஆனந்தம்
பெறுவோம்!