தனிமை- ஹைக்கூ

ஏதோ ஒரு தருணத்தில்
தன் தனித்தன்மையை
தவறாமல் உண்ர்த்தும்
தனிமை!

தனிமையை அழிப்பது
நட்பெனும் உணர்வே!

தனிமையே...
தங்கி விடாதே..
உன் ஆசைக்கு
சிறிது நேரம் பிடித்துவிட்டு
சென்று விடு!

எப்போது வந்தாலும்
எத்தனை முறை வந்தாலும்
தனிமை அழையா விருந்தாளியே!

சேர்ந்து நகரும்
கடிகார முட்களை நோக்கி
தனிமையில் நான்..

எழுதியவர் : மீனா தொல்காப்பியன் (1-Jan-18, 12:08 am)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 2791

மேலே