புது வருடம்

மயக்கும் மார்கழி
துன்பத்தை கழி!
பொங்கும் தையே..
காட்டுவாய் புதிய பாதையே.
மாசில்லா மாசி
இனி மாற்றி யோசி
வருடத்தின் கால் பங்குனி..
தொலைய வேண்டும் பிணி
சுட்டெரிக்கும் சித்திரையே..
தருவாய் சுகமான நித்திரையே.
வருடத்தில் வைகாசி..
வேண்டும் வையகத்தில் நல்லாட்சி ..
ஆசையுடன் வருமே ஆனி..
பொலிவு பெறும் நம் மேனி..
ஆற்றுக்கு அழகு ஆடி..
மகிழ்வோமே ஆடி பாடி
புல்லரிக்கும் புரட்டாசி..
கோவிந்தா! தருவாய் உன் ஆசி..
அடைமழையால் ஐப்பசி..
போக்குவாய் புவியில் பசி
கார்காலத்திற்கு கார்த்திகை
தருவாய் வாழ்வில் நம்பிக்கை..
மறுபடியும் மார்கழி..
மாறவேண்டும் நம் வழி!!

எழுதியவர் : மீனா தொல்காப்பியன் (1-Jan-18, 12:42 am)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 164

மேலே