உள்ளத்தை அள்ளும்

நதிக்கரையில் நாணல்புல் நாட்டிய மாடும்
***நடைபழகும் தென்றல் நறுமணமாய் வீசும் !
மதிவரவைக் கண்டால் மலர்ந்திடு மல்லி
***மயக்கிடும் நெஞ்சம் மகிழ்வினைச் சொல்லி !
அதியழகு மாலைதான் ஆனந்தம் சேர்க்கும்
***அரும்புகின்ற ஆசையிலே ஐம்புலனும் தோற்கும் !
உதிராத பூவாசம் உள்ளத்தை யள்ளும்
***உணர்வுகளில் ஊற்றெடுக்கும் உற்சாகம் தானே !

( வெண்டளையான் இயன்ற எண்சீர் விருத்தம் )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (16-Dec-17, 10:02 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 135

மேலே