இயற்கையில் நான் கண்டதோர் வினோதம்
நோய்வாய்ப்ப படும்போது
நாம் நாடி போவது வைத்தியரை
நமக்கு தெரியாது -எந்த நோய்க்கு
எந்த மருந்தென்று ! ஆதலால்
நாம் நாடி செல்வது -நோய்களுக்கு
மருந்தறிந்த வைத்தியரை
இயற்கையில் நான் நேரில் கண்ட
என்னை மிகவும் திகைக்க வைத்த அதிசயம்
கீரிப்பிள்ளை ஒன்று நாகத்துடன்
பெரும்போர் செய்து அதை இறுதியில்
கடித்து கொதறி குற்றுயிராக்கியது
பின்னே என் கண் எதிரிலேயே
ஒரு புதரில் ஏதோ ஓர் செடியின் இலையை
நாடி கண்டு அதை மென்னு தின்று ஓடியது!
அந்த நாகத்தின் விஷத்திற்கு அந்த செடியின்
இலைகளில் விஷ முறிவு ! பின்னே அறிந்தேன்
அதுவே சிறியாநங்கை எனும் மூலிகைச்செடி!
நாம் எல்லாரும் அறிவோம் நாய்களும்,பூனைகளும்
நோயுற்றால் அருகம்புல்லை நாடி அடைந்து
மென்னு தின்று சுகமும் அடையும் !
ஐயா! ஆறறிவுடைய நமக்கு இப்படி
ஓர் அறிவு ஏதும் இல்லையே ஆனால்
அந்த நாலறிவு விலங்கினத்திற்கு உண்டு
இப்படி அந்த அறிவு அதற்க்கு வந்தது எப்படி?
இயற்கை அவற்றிற்கு தந்த வரம் என்பேன்
பகுத்தறிவாளரிடம் இதற்கு பதில் ஏதும் இல்லையே !
படைத்தவன் ஒருவன் இருக்கின்றான்
அவனே நம்மை ஆட்டி வைக்கின்றான்
இவனுக்கு இது இவற்றிற்கு இது என்று
வாழ்விற்கு சில தருகின்றான் !
இறைவன் இருக்கின்றான்! இறைவன் இருக்கின்றான்
இதில் ஐயம் எனக்கு ஏதுமிலை !