ஆழ்ந்த தியானம்
மாசிலா நதிகளை ஓடவிட்டான் இறைவன்
மாசுபடுத்திவிட்டான் மனிதன்
மாசிலா தூய வளிமண்டலம் நமக்களித்தான் அவனே
அதை மாசுபடுத்திவிட்டான் மனிதன்
மாசிலா நிலம் படைத்தளித்தான் இறைவன்
நிலங்களும் மனிதனால் உழுது பழுதாகி
அதில் வேண்டா ரசாயனங்கள் சேர்த்து மாசடைந்து விட்டன
இப்படி, நிலம்,நீர்,,காற்று,விண்,நெருப்பு ஆகிய
ஐந்து 'பூதங்களில்' மூன்றை மாசுபடுத்திய பெருமை
மனிதருக்கு ; விண்ணையும், நெருப்பையும் மாசு படுத்த
இயலவில்லை போலும்!
மனிதருக்கு, படைத்தவன் மாசிலா இதயம் தந்தான்
அந்தோ ! என்னென்று சொல்ல! அந்த இதயங்கள் கூட
பெரும் மாசுகொண்டே இயங்குகின்றன உலகில்
'அழுக்காறு','அவா','வெகுளி','இன்னாச்சொல்' என்று
இவைகள் கூட கூட ; இன்று தூய உள்ளம் கொண்ட
மனிதரை தேடி தேடி சென்றாலும் கிடைப்பாரா ஒருவர்
தெரியவில்லையே!
உன்னுள் படிந்த மாசை அகற்றிக்கொள் மனிதா
சூற்றுப்புற சூழலும் சுத்தமாகிவிடும் !
மாசிலா உலகில் மீண்டும் நீ சுவாசிக்கலாம்
அவன் படைத்த பூமியும் சுவர்க்கமாகிவிடும்
இது சொல்வதற்கெளிது,கேட்பதற்கெளிது, ஆயின்
வழிமுறைகொணர்வதற்கு 'தவம்'இருக்கவேண்டும்
அத்தவத்திற்கு எளிய வழி 'ஆழ்ந்த தியானம்'