கணவருக்கு

கண்டேண் உனை நான் ஒரு நாளே..
அதுவே எனக்கு திருநாளே!
மனதில் புகுந்து ஆட்கொண்டாய்..
மணத்திலும் இணைந்து எனைக்கொண்டாய்!
மனதில் உதித்த என் ஆசைகள்..
மௌனத்தில் கலக்கும் அதன் ஓசைகள்!

சொல்லாமல் அடைந்தன. உன்னிடம்..
கேளாமல் நிறைவேற்றுவாய் அவ்விடம்...
கனவுகள் நிஜமாவது கண்டு...
அதிசயித்து நான் நின்றதுண்டு!
ஆல் போல் உறவு கிளைகள்..
வேறூன்றும் உன்னருகே அதன் விழுதுகள்..
முதியோர் தனை பேணிக்காக்க
கற்க வேண்டும் உன்னிடம் வி.ரைவாக!
ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கை..
இனிதாக்கியது உன் சேர்க்கை!
அடைந்தேன் உனை முற்பிறவியின் பயனால்..
அடைவேன் உனை மறுவிலும் புண்ணியத்தால்...
பெயரில் நீ கொண்டாய் தொல்காப்பியம்..
கசடற கற்க வேண்டும் அது பெருங்காவியம்!
பெயரில் மட்டும் உண்டு மீனாட்சி..
என்றும் நீ செய்வாய் எனை ஆட்சி!!

பிரியமுடன்,
மீனாட்சி.

எழுதியவர் : மீனா தொல்காப்பியன் (26-Dec-17, 10:32 pm)
Tanglish : kanavarukku
பார்வை : 589

மேலே