புதிய படைப்பு
வண்ணமீன்கள் தொட்டியில் நீந்துவதை
காண்பதுபோல் நம் உடலும்
கண்ணாடிப் பேழையாகி
உள்ளுறுப்புகள் இயங்குவதை
காணநேர்ந்தால்
யாருக்கு யார் ரசிகர்?
மனோவிகாரம் எண்ணஓட்டம்
மற்றவரால் காணும்படி கதிர்வீசினால்
வீதியில் நடைபயில இயலுமா!
அப்படிச்செய்ய படைப்புச்சக்திக்கு
வெகுசுலபம் தான்!
ஏன் விட்டுவைத்திருக்கிறது?
அழகுசுதந்திரம் அனுபவித்து
உடம்பையும் மனதையும்
நாளும் தூய்மையாக்கி "அதற்கு"
நன்றிசெய்யத் தெரியும் நமக்கு.