ஆனந்த ரமணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஆனந்த ரமணன்
இடம்:  MPN puram,Chennimalai
பிறந்த தேதி :  26-Dec-1963
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Dec-2017
பார்த்தவர்கள்:  35
புள்ளி:  8

என் படைப்புகள்
ஆனந்த ரமணன் செய்திகள்
ஆனந்த ரமணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2018 10:30 pm

*மகன்*
அன்புள்ள அப்பா,நலம்
தங்கள் நலமறிய ஆவல்
எங்கள் கல்லூரியில்
"கடிதம் எழுதும் கலை"யைக்
காப்பாற்ற உங்களுக்குகடிதம்
எழுதும்படி கட்டளை
அதன்படி இக்கடிதம்.

இந்தப் பருவத்தேர்வில்
அனைத்துப் பாடங்களிலும்
நல்ல தேர்ச்சி.இதற்கு காரணம்
நீங்கள் கொடுத்த ஊக்கம்
எனக்காக எவ்வளவு செய்திருக்கிறீர்கள்!
உலகஅறிவையெல்லாம்
ஊட்டியிருக்கிறீர்கள்
அதன்பலன் 'நல்ல அறிவாளி' என்று நற்சான்றிதழ் பெறுகின்றேன்.
என் வருங்கால வாழ்க்கைக்ககாக
இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
உங்களுக்கு எப்படி நன்றி
சொல்வதென்றே தெரியவில்லை!
நீங்களும் பதில்கடிதம்
எனக்கு எழுதுங்கள்.

*அப்பா*
அன்

மேலும்

இந்த வாழ்க்கை என்பது யாதென நாம் தான் காலத்திடம் கற்றுக் கொள்ள வேண்டும். எம்மைச் சுற்றி உள்ள பலர் வெளியில் புன்னகைத்தாலும் மனதிற்குள் எம்மைப் பற்றி யாது நினைக்கின்றார்கள் என்று மனிதன் ஒரு போதும் அறிய முடிவதில்லை. ஆலோசனைகள் எப்போதும் இயல்பானவை ஆனால் அதனை வாழ்க்கையில் ஓர் அனுபவம் இன்றி ஏற்று நடக்கத்தான் இந்த உள்ளங்கள் மறுக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Jan-2018 10:14 am
ஆனந்த ரமணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2018 8:56 pm

தைரியமுள்ளவர் தானே நீங்கள்!சரி,என் கையைப் பிடித்துக்கொள்ளுங்கள் உங்களை ஓர் இருட்டறைக்குள்
கூட்டிச்செல்லப் போகிறேன் இப்போது எங்கே கண்களை மூடிக்கொள்ளுங்கள்
இதோ வந்துவிட்டோம்!
இந்த இடத்திற்கு இன்னொரு பெயரும் உண்டு
"இதயக்குகை"

துணிவுள்ளவர் தானே நீங்கள்!சரி,மெதுவாக நடந்துவாருங்கள்
நிறைய அதிசயங்களை பார்க்கலாம்
விதைக்குள் இருக்கும் விருட்சத்தைக் காணும்
வாய்ப்பு இன்று உங்களுக்கு

கருத்துள்ளவர் தானே நீங்கள்!சரி,இங்கே பாருங்கள்!எத்தனையெத்தனை
தத்துவ மேதைகள்,ஞானியர்கள்,
கவிஞர்கள்,கலைஞர்கள்,
அறிவியல் அறிஞர்கள் அனைவரும் அயராமல்
வேலை செய்துகொண்டு இருப்பதை கண்டீர்களா!
ஆம்!ஆச்சர்யமாய்த்தா

மேலும்

என் ஜீவன் என் காதுகளில் பேசியது போல் உணர்கிறேன். உனக்குள்ளேயே எல்லாம் உண்டு ஆனால் அதனை அறியாமல் அடுத்தவர் நடந்த பாதையில் கால் வைத்து நடந்து தோற்றுப் போனவர்கள் தான் மண்ணில் ஏராளம். உன் வாழ்க்கையை நீயே தீர்மானிக்கும் ஒரு தருணம் தான் பிறப்பு அந்த அதிசயத்தை சரித்திரமாய் மாற்ற காத்துக் கிடப்பது தான் இறப்பு, என்னை பாதித்த உயிரெழுத்துக்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jan-2018 2:43 pm
ஆனந்த ரமணன் - ஆனந்த ரமணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2017 9:09 pm

வண்ணமீன்கள் தொட்டியில் நீந்துவதை
காண்பதுபோல் நம் உடலும்
கண்ணாடிப் பேழையாகி
உள்ளுறுப்புகள் இயங்குவதை
காணநேர்ந்தால்
யாருக்கு யார் ரசிகர்?
மனோவிகாரம் எண்ணஓட்டம்
மற்றவரால் காணும்படி கதிர்வீசினால்
வீதியில் நடைபயில இயலுமா!
அப்படிச்செய்ய படைப்புச்சக்திக்கு
வெகுசுலபம் தான்!
ஏன் விட்டுவைத்திருக்கிறது?
அழகுசுதந்திரம் அனுபவித்து
உடம்பையும் மனதையும்
நாளும் தூய்மையாக்கி "அதற்கு"
நன்றிசெய்யத் தெரியும் நமக்கு.

மேலும்

ஆனந்த ரமணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2017 6:58 am

நேற்றுப் பிறந்த குழந்தையை கையிலெடுத்து விளையாட்டுக்கு முறைத்தால் அழுகிறது சிரித்தால் சிரிக்கிறது!
"நோக்கக் குழையும் விருந்து"
வள்ளுவர் வாய்க்குச் சர்க்கரை
ஓவியமாய் பலகோடி பெறுகிறாள் மோனலிசா
மந்தஹாசம் புரிகிறாள்.
அவள் முகத்தில் மெல்லியகோடு இழுத்தால்
குரங்காய் மாறிப்போவாள்
பத்துரூபாய்க்கு ஏலம்
போகுமா அந்தப்படம்!
இந்த உலகம் நமக்கு என்றைக்கும் நிலைக்கண்ணாடி
புதியநகை அணிந்து
ஒப்பனை செய்க-அது
புன்னகை!

மேலும்

ஆனந்த ரமணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2017 9:09 pm

வண்ணமீன்கள் தொட்டியில் நீந்துவதை
காண்பதுபோல் நம் உடலும்
கண்ணாடிப் பேழையாகி
உள்ளுறுப்புகள் இயங்குவதை
காணநேர்ந்தால்
யாருக்கு யார் ரசிகர்?
மனோவிகாரம் எண்ணஓட்டம்
மற்றவரால் காணும்படி கதிர்வீசினால்
வீதியில் நடைபயில இயலுமா!
அப்படிச்செய்ய படைப்புச்சக்திக்கு
வெகுசுலபம் தான்!
ஏன் விட்டுவைத்திருக்கிறது?
அழகுசுதந்திரம் அனுபவித்து
உடம்பையும் மனதையும்
நாளும் தூய்மையாக்கி "அதற்கு"
நன்றிசெய்யத் தெரியும் நமக்கு.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே