புதிய நகை
நேற்றுப் பிறந்த குழந்தையை கையிலெடுத்து விளையாட்டுக்கு முறைத்தால் அழுகிறது சிரித்தால் சிரிக்கிறது!
"நோக்கக் குழையும் விருந்து"
வள்ளுவர் வாய்க்குச் சர்க்கரை
ஓவியமாய் பலகோடி பெறுகிறாள் மோனலிசா
மந்தஹாசம் புரிகிறாள்.
அவள் முகத்தில் மெல்லியகோடு இழுத்தால்
குரங்காய் மாறிப்போவாள்
பத்துரூபாய்க்கு ஏலம்
போகுமா அந்தப்படம்!
இந்த உலகம் நமக்கு என்றைக்கும் நிலைக்கண்ணாடி
புதியநகை அணிந்து
ஒப்பனை செய்க-அது
புன்னகை!

