மனித மனம்
எல்லாவற்றையும் கொட்டிடும் குப்பை தொட்டியாக சில நேரம் நான்...
அந்த சரியாக சுத்தப்படுத்தாத
கழிப்பறை நாற்றமாக
சில நேரம் நான் ...
எல்லோரும் தங்கிச் செல்லும்
சத்திரமாக சில நேரம் நான்...
வாடகை வாங்காமல்
பல வருட பந்த சொந்தத்திற்கு
வீட்டுக்காரியாக சில நேரம் நான்...
வண்ண வண்ண கோலங்கள்
போட்டு கடைசியில்
தோல்விபெறும் பச்சோந்தியாக
சில நேரம் நான்...
என்னை புரிந்து கொள்ள
எண்ணற்ற விஞ்ஞான ராஜாக்கள்
ஏனோ என்றும் புரியா
விடுதலையாக நான்...
இப்படிக்கு
# மனித மனம்....
# சிவயட்சி