காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
‍________________________________________ருத்ரா

சிரிக்கமுடியவில்லை
கவசம்.
பார்க்கமுடியவில்லை
கருப்புக்கண்ணாடி.
அந்த நீண்ட அழகிய கைகளும்
தெரியவில்லை.
கவிதை பேசும் கணுக்கால்களையும்
வண்ணச்சீறடிகளையும்
தரிசிக்கவே முடிய வில்லை.
மெல்லிய சல்லாத்துணியில்
அந்த சன் ஸ்ட்ரோக்குக்கும்
அல்ட்ரா வைலட் கதிர்வீச்சுக்கும்
கவசம் கவசம் கவசம்.

"அப்புறம்
எந்த எழவடா
காதலிக்கத் துவங்குவது?"

பெண்ணே
உன்னைக் காண இயலாத
ஏக்கமும் தாகமுமே
இப்படி கொப்பளிக்கிறது.
காதலின் கதிர்வீச்சுக்கு கவசம் இல்லை.
அறிவியலில் "குவாண்டம் டன்னலையும்"
துளைக்கும் கணித சமன்பாடுகள்
உண்டு.
காதலின் குவாண்டம்
இதோ உன் குங்குமப்பூ சிவக்கும்
கன்னங்களையும் பார்வையால்
வருடுகிறது.
சி ப்ளஸ் ப்ளஸ் ஜாவா இன்னும்
அந்த மலைப்பாம்பின் குகை என்னும்
பைத்தான் என்று
எந்த மொழியில் புகுந்துகொண்டாலும்
"காணாத உன் கண்களின்"
மொழி
என் நெஞ்சுக்குள்
"மாறன்" பதியமிட்ட‌
கரும்புக்காடுகள் இனிமையின்
அடர்மழையை பரப்புகிறது.
பெண்ணே
உன் கண்கள் வாழ்க!
அதன் வழியே நம்
காதலும்
வாழ்க வாழ்க வாழ்கவே!

============================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (22-Aug-20, 8:45 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 216

மேலே