நீ தான் வேண்டும் என் தேவதையே

பொறாமை கலந்த கோபம் வந்து எழ
முல்லை மலர் தன் முகத்தை
இதழ் கையால் மூடிக் கொண்டது
ரோஜா மலர் அங்கு
முகம் கொப்பளித்து நின்றது
நிறத்திலும் மணத்திலும்
இவள் தம்மை விட
மிகைத்து நிற்கின்றாள்
என்பதைப் பொறுக்க முடியாமல்
என் தேவதை அவ்வந்தி மாலையில்
பூந்தோட்டத்தில் என்னருகே
நான் ஆனந்தத்தில்
மிதந்து கொண்டிருந்தேன்
அவளழகை ரசித்துக் கொண்டிருந்தேன்
மார்கழி ஞாயிறே நீ வெகு விரைவில்
இன்று ஓய்வு பெற சென்று விடாதே
குளிர்க் கதகதப்பை நாடி!


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (22-Aug-20, 2:59 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 352

மேலே