புல்லை நகையுறுத்தி

புல்லை நகையுறுத்தி
பூவை வியப்பாக்கி...
நான்
சூரியனைச்சொல்லவில்லை.
அன்று மொட்டை மாடியில்
ஒரு பிருந்தாவனமாய்
நின்று விட்டு
விருட்டென்று மீண்டும்
மொட்டை மாடி ஆக்கிவிட்டு
மறைந்து விட்டாயே.

________________________ருத்ரா

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (27-Aug-21, 7:31 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 65

மேலே