கொரோனாக் கொண்டாட்டம்

திட்டமான மருந்திலா நோய்க்கு,
திட்டம் போட்டு நோட்டு வாங்கும்,
பட்டம் பெற்ற டாக்டர்க்கெல்லாம்,
மட்டமான இந்தக் கொரோனா,
துட்டு கொட்டுகின்ற கொண்டாட்டம்.

பெத்த பெண்ணைக் கரையேத்த,
மொத்த பணம் மிச்சமென்றே
ஆத்தா அப்பன் மத்தியிலே,
சத்தியமாய்க் கொரோனா
ஒரு சந்தோஷக் கொண்டாட்டம்.

நோய் பயத்தால் கயவரெல்லாம்,
மேலே சாயாமல் ஒதுங்குகிறார்.
அதனால்,
தொற்று நோய்க் கொரோனா,
கற்றைக் குழல் பெண்களுக்கு
இது மாற்றம் தரும் கொண்டாட்டம்.

பத்திரமா வீட்டுக்குள்ளே,
தத்தளிக்கும் கணவர்களும்,
பத்துப் பாத்திரம் அத்தனையும்,
சுத்தமாக் கழுவி வச்சா,
கைப்பிடித்த மனைவியர்க்கு,
இகழ்ச்சியே தரும் கொரோனா,
மகிழ்ச்சி தரும் கொண்டாட்டம்.

தேர்விலாம தேர்ச்சியாகி, அறிவு
வேரிலாத மாணவர்க்கு,
தனிமை தரும் கொரோனா, ஒரு
இனிமையான கொண்டாட்டம்.

திரண்ட ஒரு சபைதனில் நான்
நடந்தால், பிறர்
மருண்டு வழிவிடும் மாண்பதில்
கொரோனா எனக்கு
வரமான கொண்டாட்டம்.

கடவுள் பிரசாதம், தடையுண்டு.
கட்சிப் பிரச்சாரம், தடையில்லை.
சாமியின் தீர்த்தம், தடையுண்டு.
சாமியாடும் தீர்த்தம், தடையில்லை.
கொரோனா பலருக்குக் கொண்டாட்டம்.
கொரோனா சிலருக்குத்
திண்டாட்டம்.

வேண்டாமென ஒதுக்கிய
தீண்டாமை கொடுமையை,
மீண்டும் கொணர்ந்து
சீண்டும் கொரோனா,
உன்னைக் கண்டனெக்கு
கற்கண்டு கொண்டாட்டம்.

ஏன் தெரியுமா?

நீ....
சாதி மத பேதமில்லா
சமத்துவ தீண்டாமை
என்பதால்.

நெல்லை தீபன்.
94435 51706

எழுதியவர் : தீபன் (17-Apr-21, 8:25 pm)
சேர்த்தது : Deepan
பார்வை : 175

மேலே