திருநங்கை இவர்கள்

ஆண் பாதியில் பெண்ணாக
பெண் பாதியில் ஆணாக
இவர்கள் யார்?
ஆண்டவன் படைத்த படைப்பு
சரிசெய்ய முடியா பிழைகள்
படைத்தவன் செய்த தவறிது!!!
உணர்வுகளில் மாற்றம்
உடலிலும் ஏதோ மாற்றம்
ஹார்மோன் செய்யும் மாற்றம்தான் இது
உள்ளத்து ஆசைகளை உணரா உலகமிது!!
உணர்வுகளை மதியாமல் வசைபாடும் உலகமிது!!
ஏளனப்பேச்சுக்கள் ஒருபுறம்
எடுத்தெறிந்து பேசும் வார்த்தைகள் மறுபுறம்.........
கண்கள் தேடுவது என்னவோ?
கருணையோடு ஒரு பார்வை!!
பார்வையில் தான் இழந்த பாசம்!!
உறவுகளை பிரிந்த இவர்களை
உறவாக எண்ணுவோம்!!
ஆசையாய் புன்னகைக்கும் போது சிறு புன்னகை கொடுப்போம்!!
ஒரு அன்னை ஈன்றெடுத்த உயிர்தான் இவர்களும்.....
புது அடையாளம் இவர்கள்!!!
புது நம்பிக்கை கொடுப்போம்!!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (18-Apr-21, 12:02 am)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : thirunangai ivargal
பார்வை : 47

மேலே