பொறுமையே பெருமை
புல்லாங்குழல் துளை செல்லும் காற்றின் பொறுமை மெல்லிசையாகி மென்மை தருகிறது!
மண்ணை முட்டும் விதையின் பொறுமை பலன் தரும் விருட்சமாய் விரிந்து நிற்கிறது!
கரித்துண்டின் காத்திருப்போ வைரமாகி மண்ணில் மிளிர்கிறது!
கருமேகத்தின் பொறுமையெல்லாம் மழைத்துளியாகி மண்ணைத் தொடுகிறது!
சிப்பி தொட்ட மழைத்துளியின் பொறுமையெல்லாம் முத்தாய் மாறி முகம் சிரிக்கிறது!
இயற்கையின் பொறுமையெல்லாம் இன்பம் தருகிறது!
சாதிகள் கடந்த மனிதனின்
பொறுமைதான் சமத்துவமென்னும் சக்தியாய் மிளிர்கிறது!
இயற்கை போல் பொறுமை காப்போம்!
மனிதநேயம் என்னும் மாண்பை வளர்ப்போம்!