நடிகர் விவேக்

உன் நடிப்பாலும்
வசனத்தாலும்
அடக்கமுடியாத
சிரிப்பால் கண்களில்
நீர்த்துளிகள் வந்தது
அன்று

எதிர்பாராத உன்
திடீர் மரணத்தால்
கண்கள் குளமாகின
இன்று

சிரிப்புக் கலைஞன் நீ
சிந்திக்க வைத்தவனும் நீதான்
நம்பிக்கையின் தேவை உரைத்தாய்
மூடநம்பிக்கையை தவிர்த்திடு என்றாய்

விழிப்புணர்வை மக்களுக்கு
விவேகமாக சொன்னவனே
விவேகானந்தனே, உன்
விழிகளை ஏன் மூடிக்கொண்டாய்

மூச்சுக் காற்றின் அவசியத்தை
முழுவதுமாக உணர்ந்து
சாதனை படைத்தவனே
சுவாசத்தை ஏன் நிறுத்திக் கொண்டாய்

உன் சமயோசித சிந்தனையாலும்
உன் தமிழின் உச்சிரிப்பாலும்
உன் ரசிகர்களின் இதயத்தில்
நீங்கா இடம் பெற்றவனே

நீ இனி இருக்கப் போகும் இடத்தில்
உன் ஆன்மா சாந்தியடைய
அந்த எல்லாம் வல்லவனிடம்
மனதார பிரார்த்திக்கிறேன்

உன் ரசிகன்

ஆனந்த் சுப்ரமணியம்
தேதி - 17.04.21 நேரம் - மதியம் 12.42 மணி

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (17-Apr-21, 6:37 pm)
Tanglish : nadigar vivEk
பார்வை : 51

சிறந்த கவிதைகள்

மேலே