புத்தாண்டே வருக
பட்ட துயரங்கள் போதுமென்று
பாட்டாலே நான் சாடுகின்றேன்
கிட்டத்தில் எட்டுகின்ற புத்தாண்டில்
கொட்டட்டும் வளமை என்று
பாடுகின்றேன்
புவியில் இன்பம் சத்தியம் புரளும்,
நான் பறை சாற்றுகிறேன்.
கவிஞன் சொல் நிச்சயம் வெல்லும்
புத்தாண்டை போற்றுகிறேன்
வரும் புத்தாண்டே, நல்முத்தாண்டே,
வறுமை சிறுமை இவையொழித்து, நீ
பெருமை கொள்ள ஏங்குகிறேன்.
வற்றாத செல்வம் பல தந்து,எமை
முற்றாக மீட்டெடுக்க உனை
வணங்குகிறேன்.
வரும் ஆண்டு நல்லாண்டாய்
மிளிர்ந்திடவே,
வந்தீண்டு புத்தாண்டே
நீ ஒளிர்ந்திடுவாய்.
ச.தீபன்
94435 51706