தேவதூதன்

இவர்,
பிறக்கும் போதே பேரருளை
வரமாய்ப் பெற்று வந்தவர்.
மரிக்கும் போதும் மனிதத்தை
உரமாய்ப் போட்டு உயிர்த்தவர்

மரியாள் மடியில் முகிழ்த்தது
ஒரு அரிய பிள்ளை.
மண்ணுலகு மக்களுக்கே
அவர் உரிய பிள்ளை.
கண்டிப்பாய் தனக்காக அவர்
வாழ்ந்ததில்லை.
தண்டித்தவரை என்றும் அவர்
நிந்தித்ததில்லை.

சத்தியத்தை சாத்தான்கள் விற்று
விட்ட பொழுதிலும்,
எத்திசையும் சத்தியத்தை நட்டு
வைத்த நாயகர்.

கபாலஸ்தல சிலுவையில்
உறைந்து நின்ற தேவன்.
அவன்,
கருத்து நிறை போதனைகள்
உரைத்து வென்ற போதகன்.

உயிரிழந்த பின்னாலும்
உயிர்த்தெழுந்த உத்தமன்.
உதிரம் வடித்து அவன்
ஓங்கு புகழ் பெற்றவன்

ச.தீபன்.
நங்கநல்லூர்.
94435 51706.

எழுதியவர் : தீபன் (27-Dec-20, 1:47 pm)
பார்வை : 119

மேலே