ரூபாயில் மாற்றம்

இடதுப் பக்கம் திரும்பியிருந்தார்
காந்தியார் பழைய பத்து ரூபாயில்
வலதுப் பக்கம் திரும்பியிருக்கிறார்
காந்தியார் புதிய பத்து ரூபாயில்
காரணம் யாதென்று தெரியவில்லை

காந்தியை திருப்பி வைத்ததனால்
கருப்பு வெள்ளையாகுமோ இனிமேல்
கடனின்றி நாட்டில் செழிப்பாகுமோ
கள்ளவர்களால் கைபற்றாத நிலையாகுமோ
காரணம் யாதென்று தெரியவில்லை

பழைய நோட்டில் பண மதிப்பு ஆறிடத்தில்
புதிய நோட்டில் பண மதிப்பு ஏழிடத்தில்
எண்ணின் அடிப்படையில் எண்ணிக்கை
15 மொழிகளில் 13வது இடத்திலே தமிழ்
காரணம் யாதென்று தெரியவில்லை

சதுர்புறம் பார்க்கும் சிம்மம் பழையதில் ஒரேயிடத்திலே
புதிய நோட்டிலும் நாற்புறச் சிங்கம் ஒரேயிடத்திலே
புதியதில் காந்தியார் கண்ணாடி மட்டும் தனியே
பழையதிலும் புதியதிலும் வெள்ளை காந்திக்கெதிரே
காரணம் யாதென்று தெரியவில்லை

புதிய நோட்டில் புதிதாக ரூபாயின் குறியீடு
புதிய நோட்டில் புதிதாக ரூபாயின் மதிப்பு இந்தியில்
பழையதில் சிவப்பிலும் புதியதில் அடர்நிறத்திலும்
பணத்திற்கான வரிசை எண்கள், புதியதில் மாற்றமாய்
காரணம் யாதென்று தெரியவில்லை

அரை அங்கும் குறைவாய் ரூபாயின் அகலம்
அவைகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வமில்லை
அப்படி அறிந்துக் கொண்டாலும் ஆனந்தமும் இல்லை
ஆனாலும் யாவரும் இந்நாட்டு மன்னர்களே
ஆடியே கூத்தாடுவோம் அற்புத சுதந்திரம் வந்ததென்று
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (27-Dec-20, 2:06 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : roobaayil maatram
பார்வை : 66

சிறந்த கவிதைகள்

மேலே