புத்தாண்டு வாழ்த்துகள்

கடந்து செல்கிற ஆண்டுகள்
உடன் அழைத்து செல்கிறது
முடிந்த நிகழ்வுகளை !
நிலைக்கிறது சில நெஞ்சில்
மறக்கிறது மனம் பலவற்றை
வாழ்வில் நிதர்சனமிது !
பலரின் இழப்பைத்
தாங்கும் இதயம் ,
சிலரின் மறைவால்
வலிக்கும் உள்ளம் ,
உடைந்து சிதறுகிறது
உருமாறும் சிலரால் !
நலிவுற்ற நடப்பாண்டு
நலம்பெற்று வலிவுற்று
வளமான வருங்காலம்
தழைத்திட விழைகிறேன் !
கொடூர கொரானாவும்
அழியட்டும் ஒழியட்டும்
நலமும் மகிழ்ச்சியும்
நிலைத்து ஓங்கட்டும் !
மலரவுள்ள புத்தாண்டில்
மாற்றங்கள் நிகழட்டும் !
சாதிமத பேதங்கள்
மண்ணில் மறையட்டும் !
ஏழையிலா சமூகம்
சமத்துவ சமுதாயம்
உதயமாகி ஒளிவீசட்டும் !
அனைவருக்கும் உளம் நிறைந்த
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் !
HAPPY NEW YEAR ௨௦௨௧
பழனி குமார்