புத்தாண்டு மலரட்டும்
"2020" வருடத்தை
"கொரோனா வைரஸ்"
புரட்டி போட்டு விட்டது...!!
T 20 கிரிக்கெட் விளையாட்டில்
பவுன்சர் பந்தினை சந்திக்கும்
பேட்ஸ்மேன் "ரன்" எடுக்க
முடியாமல் தவிப்பது போல்...!!
கொரோனா வைரஸ்
"பயம்" என்னும்
பவுன்சர் பந்தை நம் மீது வீசி
எல்லோரையும்
"வீட்டு சிறையில்" வைத்து
உலகத்தையே
ஊரடங்கால்
கட்டிப்போட்டது ...!!
2020 ல் கற்ற பாடத்தை
மறக்காமல்
கட்டுப்பாடுகளை
மீறாமல்
2021 ம் வருடத்தை
வரவேற்போம்...!!
--கோவை சுபா