காதல் உள்ளம்
காதல் புரியா நெஞ்சினிலும்
காதல் கொணர்ந்தாய்......
ஏற்பதா மறுப்பதா புரியாமல்
குழம்பி நிற்கிறேன்.......
காதல் கனிய காத்திருக்கும்
நெஞ்சம் பல......
வீழ்ந்தேன் எனினும் துணிவில்லை
உண்மையை ஏற்க......
கோர்க்கத் துடிக்கும் விரல்களை
தடுப்பது ஏதோ......
பேசத் தவிக்கும் இதழ்கள்
மவுனித்தது ஏனோ......
என் கண்களின் மொழியறிந்து
புரிந்து கொள்வாயா......
--------- என் நேசகா......!!!