கவிதை குறிப்புகள் எடுத்து செல்வது சிரமமாய் உள்ளது
உன் வீட்டின் அருகிலே நான்
குடி வந்ததை பார்த்து
ஆச்சரியத்தில் உறைந்து
போனாய் !
என்ன செய்வது ! தொலைவாய்
அங்கிருந்து வந்து
உன்னைப்பார்த்து கவிதை குறிப்புகள்
எடுத்து செல்வது சிரமமாய் உள்ளது !
கவிதை குறிப்புகளும்
காதல் பார்வைகளும்
வாசல் கோலங்களும்
பறக்கும் முத்தங்களும்
வேண்டும் ஆதலால் !