என் உயிர்க் காதலே

கள்வனாக வாழவே விருப்பம்
உன் மனதைக் கொள்ளைக் கொள்ள
ஆசைக் கொண்டதால் . . .

சிறை வாழ்க்கை மீதேக் காதல்
உன் இதயக் கூட்டில் வாழும்
வாழ்க்கையே விருப்பமானதால். . .

இருள் சூழ்ந்த நாட்களே போதும்
உன் கண்களுக்குள்க் கண்மனியாக நான்
என்றும் வாழ்வதானால். . .

மௌன மொழியில் வாழ்வதே சம்மதம்
உன் உதடுகளில் ஒன்றாய் நான்
தோன்றி சிரிப்பதானால். . .

உருவம் இன்றியும் வாழத்
துணிவேன் உன் உயிருக்குள் என்
உயிரை கலப்பதானால் . . .

என் உயிர்க் காதலே!!!

எழுதியவர் : (21-Jun-16, 12:39 pm)
Tanglish : en uyir kaathale
பார்வை : 181

மேலே