அழகியல் உலகம்
புரியாத மொழியா நீ
பொழியாத மேகமா நீ
இரண்டும் கடக்கையில்
பெரிய கொழப்பம் தோன்றும்
மையிட்ட புருவத்துக்கு மத்தியில
மையம் கொள்ள சொன்னால்
என்ன செய்வேன்
கடல பாத்தா கவிஜனுக்கு பேனா தேவ
மீனவனுக்கு வல தேவ
எனக்கு ரெண்டும் தேவை படுகிறதே
நீ என்ன கடலா மீனா
நச்சத்திர கூட்டம் நீ ஆடும் பூந்தோட்டம்
உன் பாதம் பட்டால் முள்கூட பில்லாய் மாறும்
அணில் கடித்த நாட்டு கொய்யாக்க தான்
உன் உதடு
இடை ஒரு தங்க தகடு
நினைத்தது எல்லாம் பேசுகிறேன்
அப்படி என்றால் உன்னை பற்றி மட்டும்
தான் பேசி இருக்கிறேன்