நீங்க நினைவுகள்
ஆறு நாட்கள் சூ வில் அனுபவித்த துன்பங்கள்
விடுமுறையில் காலனி மூலம் வெளியில் செல்லும் போது கழிக்கின்றோம்
ஆறு நாட்கள் எங்களை வாட்டிய பசியை
விடுமுறையில் நல்ல உணவின் மூலம் விரட்டுகிறோம்
எங்கள் புகை படத்தை பார்த்த உறவுகள் கேலி செய்கிறார்கள்
நாங்கள் நன்றாக சாப்பிடக் காரணம் வெளிநாட்டு பணம் அல்ல
படுக்கையில் கிடந்தால் பார்க்க நாதியில்லையே என்ற பயம்
இரவில் விட்டம் என்னும் வெண் திரையை பார்க்கிறோம்
அதில் எங்கள் உறவுகளை பற்றிய நினைவுகள்
திரைப்படமாக ஓடி கொண்டிருக்கிறது
ஊரில் உள்ள உறவுகள் சுத்தமாக இருக்க இங்கு நாங்கள் சாக்கடை அள்ளுகின்றோம்
நாங்கள் திரும்பி வரும் பொழுது கொண்டு வரும் தைலங்கள்
எங்கள் வலியை நினைவு படுத்துகிறது
அந்த வாசனை திரவியங்கள் வெளிநாட்டில் நாங்கள் சிந்திய வியர்வையை நினைவு படுத்துகிற து
நாங்கள் கொண்டு வரும் ஆடைகள் மிட்டாய்கள் முகம் தெரியாத உறவுகள் கூட
என்னை தேடி வர வைக்கின்றது
கடலுக்கு சென்ற மீனவன் பெட்டியில் மீனுடன் திரும்புகிறான்
மீண்டும் அந்த பெட்டியை நிரப்ப கடலுக்குள் செல்கின்றான்
ஆம்
நாங்கள் பெட்டியில் பல பொருட்களுடன் வருகின்றோம்
மீண்டும் அந்த பெட்டியை நிரப்ப வெளிநாடு செல்கின்றோம்
இந்த வரிகள் வெளிநாட்டில் வேலை பார்க்கும் மன்னிக்கவும் கட்டிட வேலை குப்பை அள்ளுபவர்கள்
ஆகியோருக்கு சமர்ப்பணம்
நன்றி