என்னவள்

தூரதேசத்து தென்றல் ஒன்று
மனற்கூட்டில் குடியமர்ந்து
இசைத்தாளம் மீட்டுதே.......
போர்த்தொடுக்கும் இருவிழியில் நின்று
மனதிற்கான முத்தாய்ப்பு
வசீகரம் கூட்டுதே............
ஓர்நொடி ஸ்பரிசம் இன்று
காற்றினில் மறைந்திருந்து
கைவிரல்கள் தீண்டுதே.......
பிரிவும் நமக்குள் நன்று
காத்திருக்கும் காதல்
மோகம் கொள்ளுதே.......
என்னவள் நீயே என்று
உணரச்செய்யும் தருணம்
சுவாசம் ஆகுதே..........