இதுதான் காதலா

இதுதான் காதலா.....
கவிதை by: பூ.சுப்ரமணியன்
காவிய நளனே
சமைத்தாலும் – அவனுக்கு
சாப்பாடு ருசிப்பதில்லை !
அவன் முன்னே
மலர்க்கூட்டமே குவிந்து
மணம் பரப்பினாலும்
மணம் தெரிவதில்லை !
அவனுக்கு
முழு நிலவுடன்
நட்சத்திரக் கூட்டமே
அருகே ஜொலித்தாலும்
வெளிச்சம் தெரிவதில்லை!
குயில் பாடினாலும்
மயில் ஆடினாலும்
மான்கள் ஓடினாலும்
மீன்கள் துள்ளினாலும்
அவன் ரசிப்பதில்லை !
சுகமான கனவு
கண்டாலும்
மனம் துள்ளுவதில்லை
இவையெல்லாம்
அவன் காதலி
அவனிடம் கண்களால்
பேசவில்லையென்றால்...
பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை,