சச்சிந்த்ரா சுரேஷ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சச்சிந்த்ரா சுரேஷ் |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 17-Aug-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 55 |
புள்ளி | : 2 |
வணக்கம், என் பெயர் சுரேஷ்... எனக்கு திரைப்பட துறையில் கதை வசனம் எழுத அல்லது காட்சி எழுத விருப்பம். நான்கைந்து கதைகள் 2005ல் பாக்யா வார இதலில் எழுதியுள்ளேன். பத்து வருடங்களுக்கு பிறகு திரைப்பட துறையின் மேல் வந்த ஆசையால், மீண்டும் எழுத துவங்கியுள்ளேன்.
“ ப்ரியா, நான் கிளம்புறேன். ஒன் ஹவர் பர்மிசன் போட்ருக்கேன்.” என்ற அர்ச்சனா, கைப்பையை எடுத்து கொண்டு கிளம்பினாள்.
“என்னடி இவ்வளவு சீக்கிரம். வண்டி வேற சர்வீஸ் விட்ருக்கிற. எப்படி போவ?” என்றாள், ப்ரியா.
ப்ரியா அர்ச்சனாவின் பக்கத்து வீட்டு தோழி. இருவரும் ஒரே இடத்தில் பணி புரிபவர்கள்.
அர்ச்சனா, “நீ ஆபீஸ் முடிஞ்சதும், பாரிஸ்டா வந்து என்னை பிக் அப் பண்ணிக்க.” என்றாள்.
“பாரிஸ்டாவா? யாராவது வராங்களாடி” ஆவலுடன் கேட்டாள், ப்ரியா.
சிறிது மௌனத்திற்குப் பிறகு
“ம்ம்,…. யுவராஜ்” என்றாள், அர்ச்சனா.
“யுவி?..... உங்க அப்பாக்கு தெரியுமா?”.ப்ரியா ஆச்சர்யமானாள்.
“ம்ஹூம்”
“நானும் வேணா வரட்டுமா?”
“இல்ல ந
முன்னோட்டம்
கதவை திறந்தாள் உமா. கையில் கேரி கவருடன் உள்ளே வந்தான், கார்த்திக். கேரி கவரை கட்டிலில் வைத்தவன் “ஏண்டி கதவை திறக்க இவ்வளவு நேரம்? தூங்கீட்டியா? ஓங்கி உட்டேன் னு வை” என்று கத்தியபடி, பாத் ரூமிற்குள் சென்றான்.
அவள் கட்டிலில் போய் அமர்ந்தாள்.
அவன் துண்டை எடுத்து துடைத்துக் கொண்டே, கட்டிலில் வந்து அமர்ந்தான். “ஹலோ மேடம்! சாப்பிடலாமா?” என்று சொல்லி கொண்டே, கேரி கவரில் இருந்த சாப்பாடு பொட்டலத்தை வெளியே எடுத்தான்.
அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
வியப்புடன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.