சொல்லாக் காதல்

கனவுகள் கலைந்த வாழ்க்கை
வாழ்கிறேன் தோழி
உனை பிரிந்த நாளாய்.........


செல்லாக் காதல் என்றால்
ஏற்றுக்கொள்ளும் மனமே
சொல்லாக் காதலால் கொல்கிறாய்......


மறுக்கும் உந்தன் இதழால்
சிக்கித்தவிக்கும் இதயம்
கதறித் துடித்தும் மறுக்கிறாய்.....


எனக்கான உன் காதல்
அறியுமென் நெஞ்சம்
கொடுத்துவிடு என்னிடம் அழகாய்........

என் தேவதையே!!!!!

எழுதியவர் : ரசிகா (15-Jul-17, 5:25 pm)
சேர்த்தது : pratheepa kannan
பார்வை : 169

மேலே