தித்திக்கும் காதல்

அர்த்தமற்ற வெட்க புன்னகை
அலங்கரிக்க தேவையில்லை பொன்நகை.......
சொர்க்கமாகும் எத்தனை கானங்கள்
தேவையில்லை திகட்டும் பானங்கள்............
சுகமாகும் சுடுகின்ற தேநீர்
கைகளில் விளையாடும் மழைநீர் .............
உள்ளம் விரும்பும் தனிமை
ஏங்கித் தவிக்கும் இளமை........
விழிக்கத் தோன்றும் இரவுகள்
சிறகுகள் கோர்த்த கனவுகள்..........
உன்
காதலால் காதலை காதலித்து
தித்திக்கிறேன் காதலா....!!!!!!