பட்டமாய் பறக்கிறேன் மேலே

இரு சக்கர தேரில்
தேவதையின் வருகை என்னவோ
என்றும் இயல்புதான் !
நித்தம் நான் தரிசிப்பதும்
என்றும் மகிழ்வுதான் !
இன்றுதான் என்னவோ தேவதையின்
இருவழி பார்வைகள் வீச்சில்
பத்திரமாய் இருந்தா நான்
பட்டமாய் பறக்கிறேன் மேலே !