ஒற்றை ரோஜாவின் வாட்டம் பற்றியது மட்டுமே

உனக்கென காத்திருப்பில்
நேரங்களும் ஓடிவிட்டன !
நான்கு ஐந்து கவிதைகளும்
எண்ணத்தில் தோன்றிவிட்டன !
கால தாமதத்தால் உன்மீது காட்டமும் இல்லை !
எனக்கு வாட்டமும் இல்லை !
என் வாட்டம் முழுதும் உனக்கென
கையில் வைத்திருக்கும்
" ஒற்றை ரோஜாவின் "
வாட்டம் பற்றியது மட்டுமே !