பொய் அன்று மெய் எனவே

உன் அழகின் அதிசயம் பற்றி
எத்தனை கவிதைகள் புதிது புதிதாய் ,
பொய்களை
புனைந்து புனைந்து
எழுதிக்கொண்டே இருந்தாலும் !
ஒருமுறை அருகே உன் முகம்
தரிசித்து விட்டால் !
பொய் அன்று மெய் எனவே
உறுதியாய் மெய் எனவே
என்றுதான் அடம்பிடிக்கிறது
என் மனம் !