ஜன்னலோர சந்திரனே

குளிர் கொண்ட மார்கழியின்,
ஒளி மங்கும் மாலை இது!
சூரியனும் ஒய்வெடுக்கும்
இருள் சூழ்ந்த வேலை இது!!

துணை யாரும் இல்லாமல்,
நான் தொலைதூரம் செல்லுகையில்...
என் ஜன்னலோர சந்திரனே..
உன்னை சந்தித்ததில் இன்பமடி!

தூரமடி என் பயணம்..
உன் துணைவேண்டும் வருவாயோ!?
காடு மலை கடக்கவேண்டும்,
வழியில் இருள் போக்கி விடுவாயோ!?

நீ இன்றி யாருடன் நான்..
பயணங்கள் செய்திடுவேன்!?
நீ பகல் பொழுது போனதுமே..
துணையின்றி தனித்திருப்பேன்!

எழுதியவர் : நேதாஜி (11-May-18, 1:09 am)
சேர்த்தது : நேதாஜி
பார்வை : 196

மேலே