அன்னையை நினைத்திடுவோம்
அன்னையை நினைத்திடுவோம்
அன்னையவள் அரவணைத்திடுவாள் அமுதமும் அளித்திடுவாள்
ஆராரோ பாடிடுவாள் ஆரமுதைத்தூங்க வைத்திடுவாள்
இனிய கீதம் இசைத்திடுவாள் இன்பத்தைப் பெருக்கிடுவாள்
ஈன்ற மகவைச் சீராட்டிடுவாள் ஈசனை கண்முன் நிறுத்திடுவாள்
உண்மையை உணர்த்திடுவாள் உரிமையோடு கண்டித்திடுவாள்
ஊக்கம் அளித்து உவகைத்திடுவாள் ஊரறியச் செய்திடுவாள்
எண்ணங்களுக்கு உயிரளித்திடுவாள் எங்கும் நிறைத்திருப்பாள்
ஏக்கங்களைப் போக்கிடுவாள் ஏமாற்றத்தை நீக்கிடுவாள்
ஐயம் அகன்றிடுவாள் ஐம்புலனுக்கும் விருந்தளிப்பாள்
ஒவ்வாமையைச் சாடிடுவாள் ஒற்றுமையை வளர்த்திடுவாள்
ஓதாமையைத் திருத்திடுவாள் ஓசையின்றிச் செயல்படுவாள்
ஒளஷதமாய் இருந்திடுவாள் ஓளவைபோல் அறிவூட்டிடுவாள்
தாய்மை என்ற நேர்மையை தூய்மையை வாய்மையை
தலைவணங்கி வாழ்த்திடுவோம் இந்நன்நாளினிலே !!!!!