கல்லூரி காதல்
சில்லென்ற காலம்...
உன் முகம் பார்க்கும் நேரம்
ஒரு வார்த்தை போதும்,
பெரு மழை வந்து போகும்!
பார்க்காமல் பார்க்கும்...
உன் பார்வை அறிவேன்!
உன்னை பார்க்கத்தானே..
நான் கல்லூரி வருவேன்.
தொலைவினில் நீ வர..
என் தைரியம் தோற்க்குமே!
கடந்து நீ போகையில்..
காற்றில் நறுமணம் கூடுமே!
பாடங்கள் ஏதும் நான்
கேளாது கிடப்பேன்...
உன் முனங்கல் போதும்
இசையென்று இரசிப்பேன்!
மாலை நீ சென்றதும் என்
நாள் அதுவும் முடியுமே!
நாளை நீ வரும் வரை
என் இராவதுவும் நீளுமே!