அவளுடன் ஓராண்டு

இன்றுடன் ஓராண்டு..

என் துணையே..
அன்பு தோழியே..
உன்னுடன் ஓராண்டு..
கனவைப்போல கழிந்தது..!
கல்வெட்டாய் மனதில் பதிந்தது!

என் மனம் கொள்ளா வார்த்தை கொண்டு..
இன்பத்தால் நீ எனைக் கொன்று..
இன்றுடன் ஓராண்டு!

நம் மனதில் சுமந்த காதலை,
பிள்ளையாய்ப் பெற்றெடுத்து..
இன்றுடன் ஓராண்டு!

உன்னை சேராமல்..
கண்ணுறக்கம் அற்று..
கண்ணீர் வடித்த இரவுகள் முடிந்து,
இன்றுடன் ஓராண்டு!

உன்னை..
மனதினில் மணமுடித்து..
உரிமையுடன் மனைவியாக்கி..
இன்றுடன் ஓராண்டு!

ஊர் வியக்கும் பொக்கிஷமே...
உன்னை நான் போரிட்டு வென்று..
இன்றுடன் ஓராண்டு!!

உன்னுடன் ஓராண்டு..
என் வாழ்வின் பெருமிதம்!!

எனக்கு உலகம் கற்றுத் தந்தவள் நீ,
உறவுகள் கற்றுத் தந்தவள் நீ,
உள்ளம் மலர செய்தவள் நீ..
எதையும் அழகாய்க் காண பழக்கியவள் நீ!!

உன்னுடன் ஓராண்டு..
உள்ளம் நிறைந்து சிரிக்கின்றேன்!!

நம்மை..
பிரிந்தவர் எண்ணி துயரில்லை!!

அனால்,
பேசிய வார்த்தைகள் அழியவில்லை!

யாவர்க்கும்..
நம் வாழ்வே பதிலாகட்டும்!!

பிரிவு, பேரின்பம் , பெரும்பாடம்,
காதல் , கண்ணீர் , கவலை,
யாவும் கண்டோம் ஓராண்டில்!!

இனி..
முதிர்ச்சி , புரிதல் , தெளிவு கொண்டு
காலம் கழிய காதல் புரிவோம்!

அன்பே...
இது நம் வாழ்வின் முதல் ஆண்டு!
இன்னும் வாழ வேண்டும் பல்லாண்டு!!

எழுதியவர் : நேதாஜி (8-Jan-16, 9:02 pm)
பார்வை : 148

மேலே