உலக நிலா தினம்

🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

*உலக நிலா தினம்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

நிலா
சூரியனின்
பெண் பிள்ளை....!

இரவு நேர
இருளை அகற்ற
இயற்கை அன்னை
ஏற்றி வைத்த
அகல் விளக்கு....

கவிஞர்களின்
கனவு காதலி.....

இணைந்திருக்கும் காதலர்களுக்கு
நீராய் இருக்கும் நீ!
பிரிந்திருக்கும் காதலர்களுக்கு
நெருப்பாய் மாறுவது
யாராவது போட்ட சாபமா?
இல்லை
யார் மேலே கோபமா ?

காதலர்கள்
பிரிந்திருக்கும் போது
ஒருவர் முகத்தை
இன்னொருவருக்கு காட்டும்
மாயக்கண்ணாடி....

பூமி என்னும்
ஆண் மகனுக்கு
துணையாக வந்த
வாழ்க்கை துணை....

எந்த யாசகன் ?
நன்றி மறந்து
தூக்கி எறிந்து சென்றான்
இந்த ஈயத்தட்டை...

வான் மங்கை குழந்தைக்கு
குறும்பு அதிகம் தான்
இல்லை என்றால்?
தட்டைச் சுற்றி
சோற்றை இப்படி இறைத்திருக்குமா?

அவ்வப்போது
அரை குறையாகத்தான்
அலங்கரிப்பாள்
பௌர்ணமி அன்று மட்டும்
அப்படி அலங்கரிப்பாள்...!!!

எத்தனை மேகங்கள்
நிலவை
வன்புணர்ச்சி செய்ததோ ?
இத்தனை விந்துதுளிகள்
சிதறிக் கிடைக்கின்றன...!!!

*கவிதை ரசிகன்*

🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

எழுதியவர் : கவிதை ரசிகன் (20-Jul-24, 8:25 pm)
Tanglish : ulaga nila thinam
பார்வை : 48

மேலே