காலைநேரம் சாலையோரம் …

காலைநேரம் சாலையோரம் …..!
22 / 07 / 2024.

காலைநேரம் சாலையோரம்
நடை பயிலும்போது
சோலைப்பூக்கள் பாதையெங்கும்
மலர்படுக்கை விரிக்கும்.
கானக்குயில்கள் காதில்வந்து
காம்போதி ராகம் படிக்கும்.
சிறகைவிரித்து பட்டாம்பூச்சிகள்
படபடத்து விண்ணில் பறக்கும் .
தழுவிச் செல்லும் சாரல்மழை
இதயம்தனை தாக்கும்.
ஈரக்கிளையை சிலுப்பி
ஆடும் பச்சைமரங்கள்
உடல்தனை நனைக்கும்.
விடிந்தும் விடியாத வானில்
வண்ணக் கோலம் ஜொலிக்கும்.
புல்லின்மேல் பனித்துளிகள்
வைரமென மின்னும்.
புகைப்படிந்த ஓவியமாய்
மலைமுகடுகள் விரியும்.
ரோட்டோர தேநீர் கடையில்
கண்ணாடி லோட்டாவில் …
சூடான தேநீர்
வெது வெதுப்பை கூட்டும்.
ஒவ்வொரு துளியாய்
தொண்டைக்குள் இறங்கி
வாழ்வின் சொர்க்கத்தை அது காட்டும்.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (22-Jul-24, 7:26 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 90

மேலே